மின் நிறுவனத்தில் சேர விருப்பமா...
'பவர்கிரிட்' மின் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ டிரைய்னி (எலக்ட்ரிக்கல் 600, சிவில் 66), ஜூனியர் ஆபிசர் டிரைய்னி (எச்.ஆர்., 79, அக்கவுன்ட்ஸ் 35, அசிஸ்டென்ட் டிரைய்னி 22) என மொத்தம் 802 இடங்கள் உள்ளன. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி பிரிவுக்கு 112 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிப்ளமோ, பி.பி.ஏ.,/ பி.பி.எம்., / பி.காம்.,/ சி.ஏ.,வயது: 27க்குள்(12.11.2024ன் படி)தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு.தேர்வு மையம்: சென்னை.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.விண்ணப்பக்கட்டணம்: அசிஸ்டென்ட் டிரைய்னி ரூ. 200, மற்ற பணிக்கு ரூ. 300. கடைசிநாள்: 12.11.2024விவரங்களுக்கு: powergrid.in