இஸ்ரோவில் சேர விருப்பமா...
இஸ்ரோ கீழ் செயல்படும் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் (பி.ஆர்.எல்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பிரிவில் சிவில் 2, மெக்கானிக் 2, எலக்ட்ரிக்கல் 2, ஐ.டி., 3, எலக்ட்ரானிக்ஸ் 1, டெக்னீசியன் பிரிவில் மெக்கானிக் 2, டர்னர் 2, எலக்ட்ரீசியன் 2 உட்பட மொத்தம் 20 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிப்ளமோ / ஐ.டி.ஐ., வயது: 18-35 (31.10.2025ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 31.10.2025 விவரங்களுக்கு: prl.res.in