உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  வறட்சி பட்டியலில் சேர்க்காததால் எம்.எல்.ஏ., தேவேந்திரப்பா கோபம்

 வறட்சி பட்டியலில் சேர்க்காததால் எம்.எல்.ஏ., தேவேந்திரப்பா கோபம்

தாவணகெரே: வறட்சி பாதிப்பு தாலுகாக்களின் பட்டியலில், தாவணகெரே மாவட்டத்தின், ஜகளூரு தாலுகாவை சேர்க்காததால், மாவட்ட பொறுப்பு அமைச்சர் மல்லிகார்ஜுன் மீது, அத்தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., தேவேந்திரப்பா, அதிருப்தியில் உள்ளார். இது குறித்து, நேற்று அவர் அளித்த பேட்டி: ஒரே வீட்டில் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், எம்.பி.,யும் உள்ளனர். அவர்கள் எங்கள் தொகுதிக்கு, ஒன்றும் செய்யவில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு, வலியை ஏற்படுத்தினாலும் சகித்து கொள்வேன். ஆனால், தொகுதி மேம்பாட்டு விஷயத்தில், அலட்சியம் காட்டினால், எந்த காரணத்தை கொண்டும், என்னால் சகிக்க முடியாது. ஜகளூரு தாலுகாவில் மழை பற்றாக்குறையால், வறட்சி நிலவுகிறது. வறட்சி பாதிப்பு பட்டியலில், அந்த தொகுதியை சேர்க்கவில்லை. கவனக்குறைவால் எங்கள் தொகுதி விடுபட்டிருக்கலாம். ஒரு முறையாவது வறட்சி பாதிப்பு குறித்து, அமைச்சர் எங்களிடம் பேசவில்லை. எங்கள் தொகுதிக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நிதியை, வழங்க வேண்டும். இல்லையென்றால், நாங்கள் கல்யாண கர்நாடகாவில் சேர்ந்து கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி