உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பண்டிப்பூர் வனப்பகுதியில் சினிமா பாணியில் காரை வழிமறித்து 1.3 கிலோ தங்கம் கொள்ளை

 பண்டிப்பூர் வனப்பகுதியில் சினிமா பாணியில் காரை வழிமறித்து 1.3 கிலோ தங்கம் கொள்ளை

சாம்ராஜ்நகர்: பண்டிப்பூர் வனப் பகுதி வழியே நகை வியா பாரி சென்ற காரை, மூன்று கார்களில் வந்த மர்மகும்பல் விபத்தை ஏற்படுத்தி வழிமறித்தது. நகை வியாபாரி, அவரது ஓட்டுநரை தாக்கி, கடத்திச் சென்று, 1.3 கிலோ தங்க நாணயங்களை கொள்ளையடித்துத் தப்பிச் சென்றது. கேரளாவின் கோழிக்கோடில் வசிக்கும் வினு, 49, தங்க நகைகள் வியாபாரி. நகைகளை மொத்தமாக தயாரித்து, நகைக்கடைகளுக்கு கொடுத்தும் வருகிறார். விபத்து இவரிடம் தங்க நகைகள் தயாரித்து கொடுக்கும்படி, மாண்டியாவின் ராஜேஷ் ஜுவல்லர்ஸ் உரிமையாளர் கேட்டிருந்தார். இதற்காக மாண்டியாவுக்கு வினு வந்திருந்தார். ராஜேஷ் ஜுவல்லர்ஸ் உரிமையாளரிடம் தங்க நாணயங்களை வாங்கிக் கொண்டு, கோழிக்கோடுக்கு இம்மாதம் 20ம் தேதி, காரில் புறப்பட்டார். காரை சமீர் என்பவர் ஓட்டிச் சென்றார். அதிகாலை 3:00 மணியளவில், சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டுலுபேட் தாலுகாவின், பண்டிப்பூர் வனப்பகுதி சாலையில், மூலஹொளே செக்போஸ்ட் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இரண்டு இன்னோவா, ஒரு இடியாஸ் காரில் வந்த 12 பேர் கொண்ட மர்ம கும்பல், வினுவின் கார் மீது முன்னும் பின்னும் மோதினர். அச்சம் இதனால் கார் நின்றது. அந்த கார்களில் வந்த கும்பல் கீழே இறங்கி, வினுவையும் சமீரையும் கத்தியை காட்டி மிரட்டி, காருடன் அவரை கடத்திச் சென்றனர். காரின் சீட்டை கிழித்தும் பதுக்கி, பாதுகாப்பாக வைத்திருந்த 1.3 கிலோ தங்க நாணயங்களை கொள்ளையடித்து, அவர்களை நடுவழியில் நிறுத்தி இறங்கிவிட்டுத் தப்பிச் சென்றது. கொள்ளை நடந்த அன்றே, வினு புகார் அளிக்கவில்லை. கொள்ளையர்களால் தனக்கு ஆபத்து வரும் என அஞ்சி, புகார் அளிக்க தயங்கினார். நேற்று குண்டுலுபேட் போலீஸ் நிலையத்துக்கு வந்து, நடந்ததை விவரித்தார். அப்போதும் புகார் அளிக்க பயந்தார். போலீசார் தைரியமூட்டிய பின், அதிகாரப்பூர்வமாக புகாரை பெற்றனர். ஐந்து தனிப்படைகள் வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பவம் நடந்த இடத்துக்கு வந்து, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் குறித்து எஸ்.பி., டாக்டர் பி.டி.கவிதா கூறுகையில், “வினு பயணம் செய்த கார் வருவதற்காக கொள்ளை கும்பல் சாலையோரம் காத்திருந்தது உள்ளிட்ட சில தடயங்கள் கிடைத்துள்ளன. ''இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குண்டுலுப்பேட் பகுதியில் நடந்த கொள்ளை சம்பவத்திற்கும் இதற்கு சில ஒற்றுமைகள் உள்ளன. இந்த இரண்டு சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றோம். கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன,” என்றார். கேரள கொள்ளை கும்பலின் கைவரிசை இருக்கலாம் என, போலீசில் வினு சந்தேகம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை