உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தங்கமலை திருசுப்பிரமணிய சுவாமி கோவிலில் 15, 16ல் ஆடி கிருத்திகை

தங்கமலை திருசுப்பிரமணிய சுவாமி கோவிலில் 15, 16ல் ஆடி கிருத்திகை

காவல்பைரசந்திரா: தொட்டண்ண நகர் தங்கமலை திருசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் 15, 16ம் தேதிகளில் ஆடி கிருத்திகை திருவிழா விமரிசையாக நடக்கிறது. ஆடி கிருத்திகையை முன்னிட்டு, காவல்பைரசந்திரா தொட்டண்ண நகரில் உள்ள தங்கமலை திருசுப்பிரமணிய சுவாமி கோவிலில், நாளை (15ம் தேதி) பரணி கார்த்திகையை ஒட்டி, இரவில் காவல்பைரசந்திரா ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து பால்குடம் ஊர்வலம் புறப்படுகிறது. இரவில் விசேஷ பக்தி பாடல்கள் பாடப்படுகின்றன. வரும் 16ம் தேதி ஆடி கிருத்திகையை ஒட்டி, காலையில் விசேஷ பூஜையுடன் திருசுப்பிரமணிய சுவாமிக்கு ஆடிக்கிருத்திகை காவடி திருவிழா ஆரம்பமாகிறது. விழாவில் பங்கேற்று, சுவாமியின் அருளை பெறுமாறு, கோவில் தர்மகர்த்தா எம்.முனிராஜு, தலைவர் கே.தயாளமணி, பொது செயலர் டி.முனேகவுடா, உதவி தலைவர்கள் ஆர்.பெருமாள், ஜனார்த்தன், பொருளாளர் மகேந்திரன், உதவி செயலர்கள் சேகரன், பி.மோகன், உப சமிதி தலைவர் சுரேஷ், செயற்குழு உறுப்பினர்கள் சுனில் குமார் சிங், சுப்பிரமணி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி