மேலும் செய்திகள்
பெண் கொலையில் காதலர் கைது காட்டி கொடுத்தது மொபைல் போன்
38 minutes ago
போக்குவரத்து துறைக்கு ரூ.7,000 கோடி நிதியுதவி
44 minutes ago
பெண்ணுக்கு கொடுமை போலீசார் மீது குற்றச்சாட்டு
45 minutes ago
தார்வாட்: 'பொதுப்பணித்துறையில் 'டெண்டர்' வழங்க லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில், அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி பதவி விலக வேண்டும ் ' என, சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவரான, பா.ஜ.,வின் அரவிந்த் பெல்லத் வலியுறுத்திள்ளார். தார்வாடில் நேற்று அவர் அளித்த பேட்டி: பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி வீடுகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், ஆப்பிரிக்கா நாட்டில் அமைச்சர் முதலீடு செய்தது தெரிந்துள்ளது. மேலும், பொதுப்பணித்துறையிலும் விதிகளை மீறி, 2,477 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் வழங்கப்பட்டு உள்ளதும் தெரிந்துள்ளது. இந்த டெண்டரை பெற சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எவ்வளவு லஞ்சம் கொடுத்துள்ளது; யாருக்கு பணம் சென்றது என்பது பற்றி முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். சதீஷ் ஜார்கிஹோளி அமைச்சராக இருந்தால் விசாரணை நேர்மையாக நடக்காது. இதனால் அவர் பதவி விலக வேண்டும். வறட்சி நிலவரம், கஸ்துாரி ரங்கன் அறிக்கை பற்றி விவாதிக்க குறைந்தது, 10 நாட்களாவது, சட்டசபை சிறப்பு கூட்டத்தொடர் நடத்தப்பட வேண்டும். ஆனால் மூன்று நாட்கள் மட்டுமே கூட்டியிருப்பது சரியல்ல. கே.பி.எஸ்.சி., முறைகேடு வழக்கில், அதிகாரிகளை மட்டும் பலிகடா ஆக்கி விட்டு வழக்கை முடிக்க கூடாது. சம்பந்தப்பட்ட அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு பற்றியும் விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
38 minutes ago
44 minutes ago
45 minutes ago