உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  லாரி மோதி சிறுவன் பலி

 லாரி மோதி சிறுவன் பலி

உத்தரஹள்ளி: பெங்களூரு உத்தரஹள்ளியை சேர்ந்தவர் சுபலதா. இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். நேற்று காலை, மூத்த மகனை பள்ளியில் விட்டு விட்டு, இளைய மகன் பாவினை மற்றொரு பள்ளியில் விட சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர் திசையில் வந்த இரு சக்கர வாகன ஓட்டி, சுபலதா வாகனத்தின் மீது மோதினார். இதனால், நிலை தடுமாறி குழந்தையுடன் சுபலதா கீழே விழுந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த டிப்பர் லாரி, குழந்தையின் மீது ஏறி இறங்கியது. இதில் பாவின் சம்பவ இடத்தில் உயிரிழந் தார். விபத்தை ஏற்படுத்திய இரு சக்கர வாகன ஓட்டியும், டிப்பர் லாரி ஓட்டுநரும் வாகனங்களை அங்கேயே நிறுத்தி விட்டு, தப்பியோ டி விட்டனர். கெங்கேரி போக்குவரத்து போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை