மேலும் செய்திகள்
இன்று இனிதாக பெங்களூரு
21 hour(s) ago
முதல்வர் சித்துவை வீழ்த்த சிவகுமார் சூழ்ச்சி
21 hour(s) ago
கைதிகளுக்கு கஞ்சா சிறை வார்டன் கைது
21 hour(s) ago
ஆனேக்கல்: ஆனேக்கல் போலீஸ் நிலையத்தில் பாலியல் புகார் அளித்த பெண்ணின் மீதே வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால், அப்பெண்ணின் வீட்டார் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். பெங்களூரு ஆனேக்கல் பகுதியில் ஸ்கேன் சென்டரில், 'ரேடியாலஜிட்' ஆக வேலை செய்தவர் ஜெயகுமார், 30. இவர், கடந்த மாதம் வயிற்றுப்பகுதியில் ஸ்கேன் எடுக்க வந்த 34 வயது பெண்ணின் அந்தரங்க உறுப்பை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து, அப்பெண் வீடியோ ஆதாரத்துடன் ஆனேக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால், வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் காலம் தாழ்த்தினர். நடவடிக்கை எடுக்க கோரி அப்பெண்ணின் வீட்டார், அழுத்தம் கொடுத்த பிறகே, கடந்த மாதம் 20ம் தேதி ஜெயகுமார் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ஜெயகுமாரின் மனைவி, பாலியல் புகார் அளித்த பெண் மீது ஆனேக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து உள்ளார். புகாரில், தனது கணவர் ஜெயகுமாரை ஹனி டிராப் செய்ய முற்பட்டதாகவும், பாலியல் தொல்லை கொடுத்தாக பொய் புகார் அளித்ததாகவும் கூறி உள்ளார். இந்த புகாரை ஏற்ற போலீசார், பாலியல் புகார் கொடுத்த பெண் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதனால், பாலியல் புகார் அளித்த பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். 'ஆதாரங்கள் இன்றி வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், வழக்கை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் திப்பேசாமி, ஜெயகுமாரிடம் லஞ்சம் வாங்கி விட்டு பொய் வழக்கு பதிவு செய்து உள்ளார்' என தெரிவித்தனர்.
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago