| ADDED : நவ 28, 2025 05:53 AM
கொப்பால்: பத்தாம் வகுப்பு மாணவி குழந்தை பெற்றெடுத்த விவகாரம் குறித்து மாநில குழந்தைகள் உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து உள்ளது. மூன்றே நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு உள்ளது. கொப்பால் மாவட்டம், குகனுாரில் உள்ள அரசு பள்ளி விடுதியில் தங்கி படிக்கும் 10ம் வகுப்பு மாணவி, கடந்த 26ம் தேதி வயிற்று வலியால் துடித்தார். ஆசிரியர்கள் மாவட்ட மகளிர், குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவி, ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். குகனுார் போலீசார் விசாரணையில், சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான 23 வயது வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இது குறித்து, கர்நாடக மாநில குழந்தைகள் உரிமை ஆணையம் தாமாக முன்வந்து, ஆசிரியர்கள், விடுதி கண்காணிப்பாளர் என பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. மாவட்ட நிர்வாகம், எஸ்.பி., அரசித்தி ஆகியோருக்கு குழந்தைகள் உரிமை ஆணைய தலைவர் சஷிதர் கடிதம் எழுதி உள்ளார். 'இந்த விவகாரத்தில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அடுத்த மூன்று நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து தகவல்களும் இருக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.