மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
11-May-2025
பெங்களூரு: விதான் சவுதாவை கட்டிய தமிழரான தலைமை பொறியாளர் மாணிக்கத்தின், 60ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நாளை நடக்கிறது.பெங்களூரு திருவள்ளுவர் சங்க தலைவர் எஸ்.டி.குமார் அறிக்கை:பெங்களூரு திருவள்ளுவர் சங்கம் சார்பில் கர்நாடகாவில் தலைமையகமான விதான் சவுதாவை கட்டிய தலைமை பொறியாளர் மாணிக்கத்தின், 60ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, நாளை காலை 10:30 மணிக்கு நடக்கிறது.ஸ்ரீராமபுரம் தயானந்த நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், அவரது படம் திறந்து வைக்கப்படுகிறது. அவரது மகன் சீனிவாசன் மற்றும் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.
11-May-2025