உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  2 நாட்களில் சரியாகும் காங்., தலைவர் நம்பிக்கை

 2 நாட்களில் சரியாகும் காங்., தலைவர் நம்பிக்கை

மைசூரு: “கர்நாடகாவில் முதல்வர் பதவியால் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு, கட்சி மேலிடம் இரண்டு நாட்களில் தீர்வு காணும்,” என, காங்கிரஸ் செயல் தலைவர் தன்வீர் செய்ட் கூறி உள்ளார். மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: முதல்வர் பதவி மாற்றம் தொடர்பான தனது நிலைப்பாட்டை, கட்சி மேலிடம் முன்பே தெளிவுபடுத்தி இருக்க வேண்டும். தலா இரண்டு ஆண்டுகள் முதல்வர் பதவி என்று ஒப்பந்தம் போடப்பட்டதா, இல்லையா என்று, கடந்த இரண்டரை ஆண்டுகளாக குழப்பம் நிலவுகிறது. இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். இந்த குழப்பம், தற்போது ஆபத்து கட்டத்தை எட்டி இருப்பது போன்று தெரிகிறது. குழப்பத்திற்கு இரண்டு நாட்களில் மேலிடம் தீர்வு காணும். முதல்வர் மாற்றம் தொடர்பாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் முன் எந்த விவாதமும் நடக்கவில்லை. ஐந்து ஆண்டுகளும் நானே முதல்வர் என்று சித்தராமையா கூறியதற்கு, 'ஆல் தி பெஸ்ட்' என்று சிவகுமார் பக்குவமாக பதில் அளித்துள்ளார். நடக்க இருப்பதை யாராலும் தடுக்க முடியாது. மேலிடம் தீர்மானம் செய்தாலும் என்னவென்றாலும் நடக்கும். அவர்கள் நினைத்தால் அசாத்தியமும், சாத்தியம் ஆகும். நானும், சித்தராமையாவும் மைசூரு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அவர் மீது எனக்கு மரியாதை உள்ளது. ஆனால் என் இதயம் சிவகுமாருக்காக உள்ளது. அரசியல்ரீதியாக எனக்கு நிறைய உதவி செய்துள்ளார். அவருக்கு நன்றி உணர்வுடன் இருக்க நினைக்கிறேன். என் மனதில் பட்டதை சொல்கிறேன். இதனால் எனக்கு லாபமோ, நஷ்டமோ இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை