மேலும் செய்திகள்
காட்டு யானை தாக்கியதில் பெண் பலி
59 minutes ago
பழங்குடியினரிடம் கவர்னர் குறை கேட்பு
1 hour(s) ago
7 மாத ஊதிய பாக்கியை கேட்ட ஓட்டுநரை தாக்கிய மூவர் கைது
1 hour(s) ago
மலையேற்றத்தின் போது வழி தவறியவர் மீட்பு
1 hour(s) ago
பிரம்மாவர்: ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தம்பதி. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். துமகூரு மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ் மூர்த்தி, 52. இவரது மனைவி கங்கா, 48. இருவரும் கடந்த சில நாட்களாக குடகு, சிக்கமகளூரு உள்ளிட்ட மலைநாடு பகுதிகளில் உள்ள கோவில்களை தரிசித்து வந்தனர். உத்தர கன்னடாவில் உள்ள முருடேஸ்வரா சிவன் கோவிலுக்கு நேற்று முன்தினம் சென்றுவிட்டு, பிரம்மாவர் வழியாக திரும்பி வந்தனர். அப்போது, மபுகாலா பகுதியிலுள்ள பாலத்தில் சிறிது நேரம் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். திடீரென பாலத்திலிருந்து கீழே செல்லும் சீதா ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதை பார்த்த சிலர், உடனடியாக கோட்டா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்வப இடத்திற்கு தீயணைப்பு வீரர்களுடன் வந்த போலீசார், இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு முழுதும் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. நேற்று காலை சீதா ஆற்றங்கரையோரத்தில் உள்ள பாண்டேஸ்வரா பகுதிக்கு அருகே இருவரின் உடல்களும் கரை ஒதுங்கியிருந்தன. இதை அறிந்த போலீசார் உடல்களை மீட்டனர். இருவரின் கையும் துப்பட்டாவால், ஒன்றுடன் ஒன்று கட்டப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ந்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
59 minutes ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago