உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஹாசன் கால்வாயில் அடித்து செல்லப்பட்ட தம்பதி மரணம்

 ஹாசன் கால்வாயில் அடித்து செல்லப்பட்ட தம்பதி மரணம்

ஹாசன்: ஹாசனில் கால்வாயில் துணிகளை துவைத்தபோது, தவறி விழுந்த மனைவியை காப்பாற்ற சென்ற கணவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். ஹாசன் மாவட்டம், சென்னராயபட்டணாவின் நம்பிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் கோபால், 27; தீபு, 24, தம்பதி. இருவரும் நேற்று முன்தினம் ஹேமாவதி கால்வாயில், துணிகளை துவைக்க செல்வதாக, பெற்றோரிடம் கூறிவிட்டுச் சென்றனர். மனைவி துணி துவைத்தபோது, தவறி கால்வாய்க்குள் விழுந்தார். இதை பார்த்த கணவர், கால்வாயில் குதித்து மனைவியை காப்பாற்ற முயற்சித்தார். நீரின் வேகம் அதிகமாக இருந்ததால், இருவரும் அடித்துச் செல்லப்பட்டனர். துணி துவைக்க சென்றவர்கள் நீண்ட நேரமாகியும் வரவில்லை என, குடும்பத்தினர் தேட துவங்கினர். கால்வாய் அருகே சென்றபோது துணிகள் மட்டுமே தென்பட்டது. உடனடியாக சென்னராயபட்டணா ரூரல் போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு வரை தேடியும் அவர்களின் உடல்கள் கிடைக்கவில்லை. மீண்டும் நேற்று காலை தேடும் பணி நடந்தது. கோபால், சடலமாக மீட்கப்பட்டார். தீபுவின் உடலை மீட்புப் படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை