மேலும் செய்திகள்
கோலாரில் திருட்டு போன ரூ.2.57 கோடி பொருட்கள் மீட்பு
3 minutes ago
மைசூரு: 'ஆங்கில புத்தாண்டை ஒட்டி, மைசூரு சாமுண்டி மலையில் இன்று இரவு, 7:00 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது' என நகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் அறிவித்து உள்ளது. அதன் அறிக்கை: ஆங்கில புத்தாண்டை ஒட்டி, மைசூரு சாமுண்டி மலைக்கு செல்வோருக்கு, நகர போலீசார் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதன்படி, இன்று இரவு 7:00 மணிக்கு மேல் உத்தனஹள்ளி நுழைவு, தேவிவன நுழைவு, சாமுண்டி மலை படிக்கட்டுகள் வழியாகவும்; இரவு, 8:00 மணிக்கு மேல் லலித மஹால் நுழைவு வழியாகவும் வாகனங்கள் செல்ல தடை விதிக்க்பட்டுள்ளது. அதுபோன்று, இன்று இரவு 9:00 மணிக்குள் சாமுண்டி மலையில் இருந்து சுற்றுலா பயணியர், பொது மக்கள் கீழே இறங்கிவிட வேண்டும். 9:00 மணிக்கு மேல் மலையில் இருந்து புறப்படுவோர், தாவரகட்டே நுழைவு வழியாக செல்ல வேண்டும். இந்த விதிமுறைகள், சாமுண்டி மலையில் வசிக்கும் மக்களுக்கு பொருந்தாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
3 minutes ago