உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 10 வயது மகளை  தாறுமாறாக அடித்த தந்தை கைது

10 வயது மகளை  தாறுமாறாக அடித்த தந்தை கைது

எலஹங்கா : நேபாளத்தை சேர்ந்தவர் லோகேஷ், 40. இவரது மனைவி அம்ருதா, 35. இந்த தம்பதிக்கு 10 வயதில் மகள் உள்ளார். மனைவி, மகளுடன் பெங்களூரு எலஹங்கா பாலாஜி லே - அவுட்டில் வாடகை வீட்டில் லோகேஷ் வசிக்கிறார். அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்கிறார்.இந்நிலையில், நேற்று அதிகாலை 1:00 மணிக்கு லோகேஷ் வீட்டில் இருந்து அவரது மகளின் அழுகை சத்தம் கேட்டது. அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த போது, சிறுமிக்கு ரத்த காயம் ஏற்பட்டு இருந்தது. ஹொய்சாளா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.அங்கு சென்ற போலீசார், சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். லோகேஷிடம் விசாரித்த போது, தன் சொல் பேச்சை கேட்காமல் இருந்ததால், மகளை கம்பால் கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறினார். அவர் கைது செய்யப்பட்டார். மகளை தாக்கிய போது அம்ருதாவும் அங்கு தான் இருந்து உள்ளார். அவரிடமும் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை