உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  திம்மக்கா பெயரில் ஐவருக்கு விருதுகள்

 திம்மக்கா பெயரில் ஐவருக்கு விருதுகள்

பெங்களூரு: மாநில மாசு கட்டுப்பாடு வாரியம் நிறுவப் பட்ட 50 ஆண்டுகள் நிறைவ டைந்ததையொட்டி, பெங்களூரில் நேற்று பொன் விழா கொண்டாட்டங்கள் நடந்தன. விழாவில் முதல்வர் சித்தராமையா பேசியதாவது: சாலுமரத திம்மக்காவின் பெயரில் ஆண்டுதோறும் ஐந்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். 2030க்குள் பெங்களூரை பிளாஸ்டிக் இல்லாத நகராக மாற்ற மக்களும் ஒத்துழைக்க வேண்டும். இ தே சூழ்நிலை நீடித்தால், வரும் நாட்களில் பெங்களூரில் மக்கள் வாழ முடியாத சூழல் ஏற்படலாம். மக்கள் அனைவரும் சுற்றுச்சூழல் மீது அக்கறை காட்ட வேண்டும். சாலுமரத திம்மக்காவை போல அனைவரும் மாறி, மரங்களை வளர்க்க வேண்டும். மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபட்டு, மற்றவர்களுக்கு உதாரணமாக விளங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை