உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சபாநாயகர் காதருக்கு கவுரவ டாக்டர் பட்டம்

 சபாநாயகர் காதருக்கு கவுரவ டாக்டர் பட்டம்

பெங்களூரு: சபாநாயகர் காதருக்கு 'கவுரவ டாக்டர்' பட்டத்தை, தாவர்சந்த் கெலாட் நேற்று வழங்கினார். பெங்களூரில் உள்ள ராஜ்பவனில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பெங்களூரு பல்கலைக் கழகத்தின் 60வது பட்டமளிப்பு விழாவின் ஒரு பகுதியாக, சட்டசபை சபாநாயகர் காதருக்கு, கவுரவ டாக்டர் பட்டத்தை, கவர்னர் தாவர்சந்த் கெலாட் வழங்கினார். பின், கவர்னர் பேசியதாவது: சபாநாயகர் காதருக்கு கிடைத்துள்ள கவுரவ டாக்டர் பட்டம், சமூகம், மாநிலம், தேசத்திற்கு அளித்த பங்களிப்புக்கான உயரிய கவுரவம். பிரபல அரசியல் குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும், தனிப்பட்ட அர்ப்பணிப்பு, எளிமை மூலம் மக்களிடம் தனித்துவம் பெற்று உள்ளார். கர்நாடக அரசியலில் வலுவான உணர்திறன், நம்பகமான தலைவராக தொடர்ந்து ஐந்து முறை வெற்றி பெற்று உள்ளார். சபாநாயகராக இருந்து சகிப்பு தன்மை, நல்லிணக்க கலாசாரத்தை ஆதரித்து உள்ளார். அரசியல் அனுபவத்தை பயன்படுத்தி, நாட்டிற்கு நலனுக்கு சேவை செய்ய என் வாழ்த்துகள். இவ்வாறு அவர் பேசினார். பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெயகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை