மேலும் செய்திகள்
மின் கசிவால் தீ: வீடு எரிந்து நாசம்
3 minutes ago
பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்தவர் கைது
4 minutes ago
சிவாஜிநகர்: பெங்களூரு சிவாஜிநகர் காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில், மார்கழி மாதத்தை ஒட்டி, இன்று கிருத கம்பளம் பூஜை நடக்கிறது. மார்கழி மாதம் 12ம் தேதியான இன்று, பெங்களூரு சிவாஜிநகர் காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் காலை 5:30 மணிக்கு, தனுர்வ்யதீபாத புண்ணியகாலம் நடக்கிறது. சுவாமிக்கு ருத்ராபிஷேகம் செய்து, கிருத கம்பளம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடக்க உள்ளது. கிருத கம்பளம் என்பது, சுவாமியின் உடல் முழுதும் நெய் தடவி கம்பளியால் போற்றப்படும், சிறப்பு பூஜையாக பார்க்கப்படுகிறது. மார்கழி மாதத்தில் மட்டுமே நடக்கும், கிருத கம்பளத்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வது நல்லது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத் தினர் செய்து உள்ளனர்.
3 minutes ago
4 minutes ago