மேலும் செய்திகள்
மின் கசிவால் தீ: வீடு எரிந்து நாசம்
2 minutes ago
பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்தவர் கைது
3 minutes ago
காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் இன்று கிருத கம்பளம் பூஜை
4 minutes ago
ஹூப்பள்ளி: ஹூப்பள்ளி விமான நிலைய வளாகம் மற்றும் காமனகட்டி தொழிற் பகுதியில் சிறுத்தை நடமாடுவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். ஹூப்பள்ளி விமான நிலைய வளாகம் மற்றும் காமனகட்டி தொழிற் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன், சிறுத்தை நடமாடியது. இங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில், சிறுத்தை நடமாட்டம் பதிவாகியுள்ளது. இதை கவனித்த விமான நிலைய ஊழியர்கள், உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, வனபாதுகாப்பு அதிகாரி வசந்தரெட்டி, உதவி அதிகாரி விவேக் கவரி, ஹூப்பள்ளி விமான நிலைய இயக்குநர் ரூபேஷ்குமார் மற்றும் வனத்துறை ஊழியர்கள் அங்கு வந்தனர். விமான நிலையம், காமனகட்டி தொழிற்பகுதியில், சிறுத்தையை தேடினர். எங்கு பதுங்கியுள்ளது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுத்தையை அடையாளம் காண, கேமரா டிராப்களை பொருத்தினர். கூண்டு வைக்கவும் ஏற்பாடு செய்துள்ளனர். வனத்துறை ஊழியர்கள் இரவு, பகலாக ரோந்து சுற்றுகின்றனர். சிறுத்தை சிக்கும் வரை, ஹூப்பள்ளி விமான நிலையம், காமனகட்டி தொழிற் பகுதியின் சுற்றுப்புறங்களில் வசிப்போர், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இரவு 7:00 முதல் காலை 7:00 மணி வரை தனியாக நடமாட வேண்டாம்; சிறார்களை வெளியே விளையாட விட வேண் டாம். கதவை தாழிட்டு வைப்பது நல்லது. விமான நிலைய ஊழியர்களும் தனியாக நடமாடக்கூடாது. முடிந்த வரை கூட்டமாக நடமாடுங்கள் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. காமனகட்டி தொழிற் பகுதியில், குப்பைகளை கொட்டுகின்றனர். இதிலுள்ள உணவை சாப்பிட தெரு நாய்கள் வரும். அதை வேட்டையாட சிறுத்தை வரும் அபாயம் உள்ளது. எனவே, குப்பையை கொட்ட வேண்டாம் என, வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியள்ளனர்.
2 minutes ago
3 minutes ago
4 minutes ago