உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பிரதமரான பின் முதன் முறையாக மோடி 28ல் உடுப்பி வருகை

 பிரதமரான பின் முதன் முறையாக மோடி 28ல் உடுப்பி வருகை

உடுப்பி: பிரதமராக பதவியேற்ற பின் முதன் முறையாக நரேந்திர மோடி, வரும் 28ல் உடுப்பியின் கிருஷ்ணர் மடத்துக்கு வந்து, ஸ்ரீ கிருஷ்ணரை தரிசனம் செய்ய உள்ளார். உடுப்பியின் வரலாற்று பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் மடத்தில், கீதோத்சவம் நடந்து வருகிறது. இதில் பங்கேற்கும் வகையில், வரும் 28ல் பிரதமர் மோடி, வருகை தருகிறார். பிரதமரை வரவேற்க உடுப்பியில் ஏற்பாடுகள் நடக்கின்றன. அன்று காலை 8:00 மணிக்கு, டில்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் புறப்படும் பிரதமர் மோடி, மங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு வந்திறங்குவார். அங்கிருந்து ஹெலிகாப்டரில், 11:45 மணிக்கு உடுப்பி வந்தடைவார். மதியம் 12:00 மணிக்கு கிருஷ்ணர் மடத்துக்கு செல்லும் பிரதமர், கிருஷ்ணரை தரிசனம் செய்வார். அதன்பின் சுவர்ண மண்டபத்தை திறந்து வைப்பார். அதன்பின் நடக்கும் பகவத் கீதை சுலோகங்கள் பாராயணத்தில் பங்கேற்பார். மதியம் 1:45 மணிக்கு உடுப்பியில் இருந்து, மங்களூரு விமான நிலையத்துக்கு செல்வார். பகவத் கீதையின் 10 சுலோகங்களை பாராயணம் செய்வார். இந்நிகழ்ச்சியில் ஒரு லட்சம் பக்தர்கள் பங்கேற்பர். பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க, சிறப்பு பாதுகாப்பு படையினர், நாளை உடுப்பி வருகின்றனர். மடம் வளாகத்தில் பக்தர்களுக்கு சிறப்பு பாஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் பங்கேற்கும் பகவத் கீதை பாராயணம் நடக்கும் நிகழ்ச்சிக்காக, ஜெர்மன் தொழில்நுட்பம் கொண்ட பந்தல் பொருத்தப்படுகிறது. இதற்கு முன்பு குஜராத் முதல்வராக இருந்தபோது, உடுப்பி கிருஷ்ணர் மடத்துக்கு மோடி வந்திருந்தார். பிரதமரான பின், முதன் முறையாக, உடுப்பிக்கு வந்து கிருஷ்ணரை தரிசிக்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை