| ADDED : நவ 28, 2025 05:34 AM
மைசூரு: தென்னகத்தின் காசி என பிரசித்தி பெற்றுள்ள நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உண்டியலில், 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான காணிக்கை வசூலாகியிருந்தது. மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகாவில், நஞ்சுண்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள சிவனுக்கு ஸ்ரீகண்டேஸ்வரர் என்ற பெயரும் உள்ளது. கர்நாடகாவின் புராதன பிரசித்தி பெற்ற கோவிலாகும். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அதிகமான வருவாய் கொண்ட கோவில்களில், இதுவும் ஒன்று. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கோவில் உண்டியல் எண்ணப்படும். நேற்று முன்தினம் கோவிலின் அனைத்து உண்டியல்களும் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. உண்டியலில் 3.02 கோடி ரூபாய் ரொக்கம், 82 கிராம் தங்கம், 2.680 கிலோ வெள்ளி பொருட்கள், 34 வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன.