மேலும் செய்திகள்
அரசு அலுவலக பணி நேரம் மாற்றம்?
16-Mar-2025
பெங்களூரு : பெலகாவி, கலபுரகி மாவட்டங்களில் நடப்பாண்டு வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, காலை 8:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை பணியாற்ற சலுகை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே அறிக்கை:
பெலகாவி, கலபுரகியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. கிராமப்புற பகுதிகளில் நரேகா திட்டப்பணிகள், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாகும். எனவே, இவ்விரு மாவட்டங்களில் நரேகா திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, அவர்களின் பணி அழுத்தத்தில் 30 சதவீதம் குறைத்து உத்தரவிட்டு உள்ளார். இந்த சலுகை, மே மாதம் இறுதி வரை அமலில் இருக்கும்.பணி நேரத்தின் போது தொழிலாளர்கள் வெள்ளை நிற காதி ஆடைகள் அணிந்தும், தலையில் வெள்ளை துணியை கட்டிக் கொள்ள வேண்டும். டீ, காபி, குளிர்பானம், காரமான உணவு, எண்ணெய் உணவு களை தவிர்க்க வும். அதற்கு பதிலாக, நீர் சத்து உள்ள காய்கறிகள், நெல்லிக்காய், மோர், அதிகளவில் தண்ணீர் குடிக்கவும்.அடிப்படை வசதிகளான குடிநீர், முதலுதவி பெட்டி உட்பட தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை அதிகாரிகள் செய்து கொடுக்கவேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
16-Mar-2025