உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நவம்பர் புரட்சி நடந்தே தீரும் எதிர்க்கட்சி தலைவர் உறுதி

நவம்பர் புரட்சி நடந்தே தீரும் எதிர்க்கட்சி தலைவர் உறுதி

பெங்களூரு: ''கர்நாடக காங்கிரசில் நவம்பர் புரட்சி நிச்சயம் நடக்கும். எனவே தான் சிவகுமார் டில்லி சென்றார்,'' என, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் தெரிவித்தார். பெங்களூரில் அவர் கூறியதாவது: நவம்பரில் புரட்சி ஏற்படும் என்று நான் சொன்னபோது, என்னை விமர்சித்தனர். இப்போது அக்கட்சி தலைவர்களே அதை சொல்கின்றனர். முதல்வரும் அமைச்சரவை மாற்றம் குறித்து அறிவித்துள்ளார். கர்நாடக காங்கிரசில் நவம்பர் புரட்சி நிச்சயம் நடக்கும். எனவே தான் சிவகுமார் டில்லி சென்றார். மழையால் ஏற்பட்ட பயிர் சேதத்துக்கு இன்னும் இழப்பீடு வழங்கவில்லை. கூடுதலாக சோயா, சூரியகாந்தி, உளுந்து உள்ளிட்ட பயிர்களுக்கும் அரசு வழங்க வேண்டும். இது தொடர்பாக அரசு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நடப்பு நிதியாண்டில் ஆறு மாதங்கள் கடந்த பின்னரும், மேம்பாட்டுப் ப ணிக்காக 30 சதவீதம் நிதி மட்டுமே பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஆர்.எஸ்.எஸ்.,சை விமர்சிக்கும் அமைச்சர் பிரியங்க் கார்கே, தன் துறைகளுக்கு 11.02, 10.86 சதவீத நிதியை மட்டுமே பயன்படுத்தி உள்ளார். தன் துறைகளின் செயல்திறனை மோசமாக வைத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை