எஸ்.சி., பிரிவில் சேர்க்க எதிர்ப்பு
ராய்ச்சூர்: ''வீரசைவ லிங்காயத் ஜங்கம் சமூகத்தை, எஸ்.சி., சமூகத்துடன் இணைக்கக்கூடாது,'' என காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஆஞ்சநேயா தெரிவித்தார்.ராய்ச்சூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:மாநிலத்தில் நடந்த கணக்கெடுப்பில், வீரசைவ லிங்காயத் ஜங்கம் சமூகத்தை சேர்ந்த சிலர், நாங்கள் ஜங்கம் சமூகத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்று பொய் கூறி, எஸ்.சி., பிரிவு உள்இடஒதுக்கீடு பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்கின்றனர். இது சரியல்ல.இதற்கான போலி சான்றிதழ் கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சரவையில் விவாதித்து, உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.