உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அரசு பள்ளி விழாவில் அரசியல் பா.ஜ., – எம்.எல்.ஏ.,வுக்கு எதிர்ப்பு

அரசு பள்ளி விழாவில் அரசியல் பா.ஜ., – எம்.எல்.ஏ.,வுக்கு எதிர்ப்பு

மங்களூரு: அரசு பள்ளி விழாவில் மாணவர்கள் முன்னிலையில் அரசியல் பேசிய பா.ஜ., – எம்.எல்.ஏ., ஹரிஷ் பூஞ்சாவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தட்சிண கன்னடா மங்களூரு புஞ்சலகட்டேவில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில், புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தின் திறப்பு விழா, நேற்று முன்தினம் அப்பள்ளி வளாகத்தில் நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பெல்தங்கடி தொகுதி பா.ஜ., – எம்.எல்.ஏ., ஹரிஷ் பூஞ்சா, பள்ளி மாணவர்கள் முன்னிலையில் பேசியதாவது: பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தின் செலவுக்கு, காங்கிரஸ் கட்சி ஒரு ரூபாய் கூட தரவில்லை. காங்கிரசை மாணவர்கள் நம்பக் கூடாது. அக்கட்சியின் பின்னால் மாணவர்கள் செல்லக்கூடாது. இப்பள்ளியில் உள்ள ஆசிரியர்களை காங்கிரஸ் கொடுமைப்படுத்துகிறது. நம்நாடு, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழே இயங்குகிறது. இப்பள்ளியில் படித்த ஏராளமானோர், தங்கள் வாழ்வில் நல்ல இடத்தில் உள்ளனர். அவர்களை போல, மாணவர்களாகிய நீங்களும் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மேலும், ‘பிரதமர் மோடிக்கு ஜே; பாரத் மாதாகி ஜே’ என்றும் கூறினார். பள்ளி மாணவர்கள் முன்னிலையில் பா.ஜ., – எம்.எல்.ஏ., ஹரிஷ் அரசியல் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு கல்வியாளர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ