உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தங்கவயலில் 500 ஏக்கரில் ரயில் பெட்டி தொழிற்சாலை ம.ஜ.த., - எம்.பி., தகவல்

 தங்கவயலில் 500 ஏக்கரில் ரயில் பெட்டி தொழிற்சாலை ம.ஜ.த., - எம்.பி., தகவல்

தங்கவயல்: ''தங்கவயலில், தங்கச் சுரங்க நிறுவனத்தின், 500 ஏக்கர் காலி நிலத்தில், ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும்,'' என, கோலார் ம.ஜ.த., - எம்.பி., மல்லேஸ்பாபு தெரிவித்தார். கோலாரின் தொட்லிகேட் என்ற இடத்தில், ஷிருடி சாய்பாபா கோவிலில் மண்டல பூஜை நிறைவு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற பின் அவர் அளித்த பேட்டி: ரயில் பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலைக்கு, 500 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. கர்நாடகாவில் எங்கும், 500 ஏக்கர் நிலம் கிடைக்கவில்லை என்பதால், சென்னையில் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் கிடைத்தது. உடனடியாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இணையமைச்சர் வி.சோமண்ணா ஆகியோரை சந்தித்து, தங்கவயலில் தங்கச்சுரங்க நிறுவனத்தின் 12,000 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. அதில், 500 ஏக்கர் நிலத்தில், ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்கலாம் என்று தெரிவித்தேன். அதனை ஏற்று ஒப்புதல் அளித்தனர். இதற்கான பணிகளை ரயில்வே விரைவில் மேற்கொள்ள உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி