தமிழின் பெருமையை உணர்த்திய ராஜ மணிகண்டன் குழுவின் நாடகம்
- நமது நிருபர் - பெங்களூரு புத்தக திருவிழாவில், மதுரை கே.எஸ்.ராஜமணிகண்டன் குழுவினரின் 'வள்ளி திருமணம்' கூத்தரங்கம் என்ற பெயரில் நேற்று மாலை நடந்தது. முருகர் வேடத்தில் கே.எம்.பரசுராமன், நாரதர் வேடத்தில் முனைவர் சந்தனகுமார், அவ்வை வேடத்தில் எஸ்.பி.செந்தில் வேல்முருகன் நடித்தனர். எஸ்.பி.லட்சுமணன் மிருதங்கம் வாசிக்க, கே.எஸ்.சத்தியவான் ஆல்ரவுண்ட் இசையும், கே.எஸ்.ராஜமணிகண்டன் ஹார்மோனியமும் வசித்தனர். இவ்வுலகில் இனியது எது; அரியது எது; கோடியது எது என்பதை, பாடல்கள் வரிகள் மூலம் எடுத்து காட்டி, வள்ளி திருமண நாடகம் அரங்கேறியது. முத்தாரங்க பாடல் மூலம் தமிழின் பெருமை, தொன்மையை உணர்த்தப்பட்டது. பார்வையாளர்கள் கைதட்டி ஊக்குவித்தனர்.