உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பிரியங்க் கார்கேவுக்கு முதல்வர் பதவி பற்ற வைக்கும் சலவாதி நாராயணசாமி

 பிரியங்க் கார்கேவுக்கு முதல்வர் பதவி பற்ற வைக்கும் சலவாதி நாராயணசாமி

சாம்ராஜ்நகர்: ''தலித் சமுதாயத்தின் வேறு தலைவரை முதல்வராக்க, மல்லிகார்ஜுன கார்கே விடமாட்டார். அந்த சமுதாயத்தினருக்கு முதல்வர் பதவி கொடுப்பதானால், பிரியங்க் கார்கேவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும்,'' என, மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி தெரிவித்தார். சாம்ராஜ் நகரில் நேற்று அவர் அளித்த பேட்டி: துணை முதல்வர் சிவகுமார், என்றைக்கும் முதல்வர் சித்தராமையாவின் வீட்டுக்கு சென்றதில்லை. அதே போன்று முதல்வரும், துணை முதல்வரின் வீட்டுக்கு சென்றது இல்லை. பதவி நாற்காலியை தக்க வைத்து கொள்ளும் நோக்கில், சிவகுமாரின் வீட்டுக்கு சென்றுள்ளார். பெயருக்கு மட்டுமே, 'பிரேக் பாஸ்ட் மீட்டிங்' நடத்துகின்றனர். மனங்களே, 'பிரேக்' ஆன பின், மீட்டிங் நடத்தி என்ன பயன். இவர்கள் மாநிலத்தின் முன்னேற்றம் குறித்து ஆலோசிக்க, தலித்துகள், விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காண, ஒன்று சேர்ந்து பிரேக் பாஸ்ட் மீட்டிங் நடத்தினரா? மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். 'முதல்வரும் நானும் சகோதரர்கள்' என, சிவகுமார் கூறியுள்ளார். இவர் குக்கர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவர்கள், பெங்களூரில் குற்றச்செயல்களில் ஈடுபட்டோரையும் சகோதரன் என்பார். எனக்கு தெரிந்த வரை, இவரது சகோதரர் சுரேஷ் மட்டுமே. காங்கிரசில் தலித்துகளுக்கு, பதவி இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டால், முனியப்பா, மஹாதேவப்பா, பரமேஸ்வர் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. தலித் சமுதாயத்தின் வேறு தலைவரை முதல்வராக்க, மல்லிகார்ஜுன கார்கே விடமாட்டார். அந்த சமுதாயத்தினருக்கு முதல்வர் பதவி கொடுப்பதானால், பிரியங்க் கார்கேவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். காங்கிரஸ் போன்று, மோசமான கட்சி வேறொன்று இல்லை. இந்த கட்சி அழிந்தால் தான், மக்களால் முன்னுக்கு வர முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை