உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பெண்ணை எரித்து கொல்ல  முயன்ற தமிழக வாலிபர் கைது 

 பெண்ணை எரித்து கொல்ல  முயன்ற தமிழக வாலிபர் கைது 

பசவேஸ்வராநகர்: மகளை திருமணம் செய்து வைக்க மறுத்ததால், பெண்ணை எரித்து கொல்ல முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார். பெங்களூரு, பசவேஸ்வரா நகர் சானேகுருவனஹள்ளியில் வசிப்பவர் கீதா, 40. விதவையான இவர், மளிகை கடை நடத்தினார். இவரது கடைக்கு அருகில், தமிழகத்தின் முத்து அபிமன்யு, 28 என்பவர், டீக்கடை நடத்தினார். இவரும், கீதாவின், 19 வயது மகளும் காதலித்தனர். முத்துவுக்கு, மகளை திருமணம் செய்து வைக்க, தாய் முடிவு செய்தார். கடந்த சில மாதங்களாக மூன்று பேரும் ஒரே வீட்டில் வசித்தனர். முத்துவுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் மகளை திருமணம் செய்து வைக்க கீதா திடீரென மறுத்தார். இதனால் ஏற்பட்ட தகராறில் கடந்த 24ம் தேதி கீதா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு முத்து தப்பினார். பலத்த தீக்காயம் அடைந்த கீதா, விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். தலைமறைவாக இருந்த முத்து நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்