உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ரன்யா ராவுக்கு 7 ஆண்டு தண்டனை மனுவில் டி.ஆர்.ஐ., வலியுறுத்தல்

 ரன்யா ராவுக்கு 7 ஆண்டு தண்டனை மனுவில் டி.ஆர்.ஐ., வலியுறுத்தல்

பெங்களூரு: 'தங்கம் கடத்திய வழக்கில் ரன்யாராவுக்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்க வேண்டும்' என, நீதிமன்றத்தில், டி.ஆர்.ஐ., வலியுறுத்தியுள்ளது. கர்நாடகாவில் சிவில் உரிமைகள் இயக்குனரக டி.ஜி.பி.,யாக இருப்பவர் ராமசந்திரராவ். இவரது மகள் ரன்யாராவ்; நடிகை. கடந்த மார்ச் 3ம் தேதி துபாயில் இருந்து பெங்களூருக்கு 14 கிலோ தங்கம் கடத்தி வந்த வழக்கில், நடிகையை டி.ஆர்.ஐ., எனும் வருவாய் புலனாய்வு பிரிவு கைது செய்தது. இவரது காதலன் தருண் கொண்டாரு ராஜு, நகை வியாபாரிகள் ஷாகில் ஜெயின், பரத்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நான்கு பேருக்கும் ஓராண்டிற்கு ஜாமின் கிடைக்காத வகையில், 'காபிபோசா' சட்டத்தின் கீழ் டி.ஆர்.ஐ., வழக்குப்பதிவு செய்தது. இதற்கிடையில், நான்கு பேர் மீதும் பெங்களூரு பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் 2,200 பக்க குற்றப்பத்திரிகையை, டி.ஆர்.ஐ., தாக்கல் செய்துள்ளது. ரன்யா, காதலன் தருண் உதவியுடன் துபாயில் இருந்து 270 கோடி ரூபாய் மதிப்பிலான 127 கிலோ நகைகளை கடத்தியதாகவும், இந்த வழக்கில் ரன்யாவுக்கு 102 கோடி ரூபாய்; தருணுக்கு 62 கோடி ரூபாய்; ஷாகில், பரத்துக்கு தலா 53 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது பற்றியும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. துபாயில் விரா டைமண்டஸ் என்ற பெயரில், ரன்யா நிறுவனம் நடத்தியது பற்றியும், அந்த நிறுவனம் துபாய்க்கு தங்கத்தை இறக்குமதி செய்து, இந்தியாவுக்கு கடத்தியது பற்றியும், தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி, விமான நிலையத்தில் இருந்து ஒவ்வொரு முறையும் ரன்யா வெளியே வந்ததும் பற்றியும் குற்றப்பத்திரிகையில் விபரிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ரன்யாவுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்க வேண்டும் என, நீதிமன்றத்தில், டி.ஆர்.ஐ., மனு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை