உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  வருகை பதிவேட்டில் முறைகேடு பல்கலை ஊழியர் தலைமறைவு   

 வருகை பதிவேட்டில் முறைகேடு பல்கலை ஊழியர் தலைமறைவு   

ஆனேக்கல்: கல்லுாரிக்கு வராமல் வருகை பதிவேட்டில் முறைகேடு செய்து தேர்வு எழுத உதவும் பல்கலை கழக ஊழியர் தலைமறைவாக உள்ளார். அவருக்கு லஞ்சம் கொடுத்த நான்கு மாணவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. பெங்களூரின் புறநகர் பகுதியான ஆனேக்கலில் உள்ளது 'அல்லையன்ஸ்' பல்கலை கழகம். இங்கு படிக்கும் மாணவர்களின் வருகை பதிவு குறைவாக இருந்தால், அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். இப்படிப்பட்ட மாணவர்களை அணுகிய பல்கலையின் ஊழியர் மோனிஷ் பாபு என்பவர், அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு, அவர்களின் வருகை பதிவேட்டில் மாற்றம் செய்து, தேர்வு எழுத உதவியுள்ளார். இந்த மோசடி விவகாரம், கடந்த மாதம் பல்கலை நிர்வாகத்துக்கு தெரிய வந்தது. உடன், போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரிப்பதை அறிந்த மோனிஷ் பாபு தலைமறைவானார். அவரது வங்கி கணக்கை ஆய்வு செய்ததில், கடந்த மார்ச் முதல் நவம்பர் வரை, 50,000 ரூபாய்க்கு மேல் பணம் செலுத்தியவர்களின் விபரம் தெரியவந்தது. அதன்படி, பி.டெக் இறுதியாண்டு மாணவர்களான தருண், சவ்வா டிரினியன் ரெட்டி, வினோத், பிரவீன் குமார் ஆகியோர் பணம் அனுப்பியது கண்டறியப்பட்டது. அவர்கள் தங்கள் வருகை பதிவேடு சதவீதத்தை அதிகரிப்பதற்காக பணம் அனுப்பி உள்ளனர். இதில், முன்னாள் மாணவர் கிஷோருக்கும் தொடர்பு உள்ளது. இதனால், நான்கு மாணவர்கள் உட்பட ஆறு பேர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை