உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவரானார் வெங்கடேஷ் பிரசாத்

 கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவரானார் வெங்கடேஷ் பிரசாத்

பெங்களூரு: கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக, இந்திய அணி முன்னாள் வேக பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத், 12 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தேர்வாகி உள்ளார். கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு புதிய தலைவர், துணை தலைவர், நிர்வாகிகளை தேர்ந்து எடுக்க டிசம்பர் 7ல் தேர்தல் நடக்கும் என்று, கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. தலைவர் பதவிக்கு இந்திய அணி முன்னாள் வீரர் பிரிஜேஷ் படேல் பிரிவில் இருந்து சாந்தகுமாரும், இந்திய அணி முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே பிரிவில் இருந்து இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத்தும் போட்டியிட்டனர். இருவரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனு சரிபார்ப்பின் போது ஸ்போர்ட்ஸ் கிளப்பில் 200 ரூபாய் நிலுவை வைத்ததால் சாந்தகுமார் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வெங்கடேஷ் பிரசாத் போட்டியின்றி வென்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். இதனை எதிர்த்து சாந்தகுமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் தேர்தல் அதிகாரி அறிவிப்பை ரத்து செய்தது. இந்நிலையில் நேற்று தேர்தல் நடந்தது. காலையில் இருந்து சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் ஓட்டு போட்டனர். சங்க உறுப்பினரான துணை முதல்வர் சிவகுமாரும் தனது ஓட்டை பதிவு செய்தார். நேற்று மாலையில் வெளியான முடிவில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வெங்கடேஷ் பிரசாத் வெற்றி பெற்றதாக, தேர்தல் அதிகாரி அறிவித்தார். வெங்கடேஷ் பிரசாத் 749 ஓட்டுகளும், சாந்தகுமார் 558 ஓட்டுகளும் பெற்றனர். அனில் கும்ப்ளே பிரிவில் இருந்து துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுஜித் சோமசுந்தர், பொருளாளர் பதவியில் மதுகர், பொது செயலர் பதவியில் சந்தோஷ் மேனன் வெற்றி பெற்றனர். இந்த தேர்தலில் மொத்தம் 1,3 15 ஓட்டுகள் பதிவாகி உள்ளன. கடந்த 2013ல் 1,351 ஓட்டுகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 2010 முதல் 2013 வரை அனில் கும்ப்ளே தலைவராக இருந்த போது, வெங்கடேஷ் பிரசாத் துணை தலைவராக இருந்தார். தற்போது தலைவராக தேர்வாகி மீண்டும், சங்கத்திற் குள் வந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை