உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தனியாக இருந்த பெண் கொலை கள்ளக்காதல் காரணமா?

 தனியாக இருந்த பெண் கொலை கள்ளக்காதல் காரணமா?

பொம்மனஹள்ளி: தனியாக இருந்த பெண்ணை, கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஷிவமொக்கா மாவட்டம், சாகரா தாலுகாவை சேர்ந்த, பிர மோதா, 37, பெங்களூரின் ஹொங்கசந்திராவில் உள்ள கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினார். பிரமோதாவும், அவரது சகோதரி சாரதாவும் சுரேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டனர். குடும்ப பிரச்னை காரணமாக, கணவரிடம் இருந்து பிரிந்த பிரமோதா, முனிசுப்பாரெட்டி லே - அவுட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது கணவரும், சகோதரியும் கே.ஆர்.புரத்தில் வசிக்கின்றனர். இதற்கிடையே ரமேஷ்என்பவருடன், பிரமோதா நெருங்கி பழகினார். ரமேஷ் திருமணமானவர். இவர் அவ்வப்போது, பிரமோதாவின் வீட்டுக்கு வருவார். நேற்று அதிகாலை பிரமோதாவின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பினர். இது குறித்து, தகவலறிந்த பொம்மனஹள்ளி போலீசார், உடலை மீட்டு விசாரணையை துவக்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ