மேலும் செய்திகள்
புல் அவுட்
2 minutes ago
வீட்டு வளாகத்துக்கு வந்த முதலை
3 minutes ago
அதிக லாபம் ஆசை காட்டி ரூ.23 கோடி சுருட்டிய தம்பதி
4 minutes ago
3 பேருக்கு 10 நாள் போலீஸ் காவல்
5 minutes ago
உத்தர கன்னடா: ஆன்லைனில் வீட்டில் இருந்து பகுதி நேரம் வேலை செய்யலாம் என கூறி, பெண்ணை ஏமாற்றி, 10.98 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். உத்தர கன்னடா மாவட்டம், கார்வாரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 32 வயது பெண்ணின் 'டெலிகிராம்'க்கு, 'மிசிகா' என்ற பெயரில் கடந்த 4ம் தேதி குறுந்தகவல் வந்தது. வீட்டில் இருந்து பகுதி நேரமாக வேலை செய்தால், தினமும் 3,000 ரூபாய் சம்பாதிக்கலாம் என்று இருந்தது. இதற்கு சம்மதம் தெரிவித்து அவர் தகவல் அனுப்பினார். உடனே மர்ம நபர், வாட்ஸாப் காலில் அவரை தொடர்பு கொண்டார். அவர் கூறிய இணையதளத்தில் நுழைந்து, அவர்களின் பொருட்களுக்கு மதிப்பளித்து கருத்துத் தெரிவித்தார். இதையடுத்து, '10,000 ரூபாய் முதலீடு செய்தால், 15,268 ரூபாய் லாபம் கிடைக்கும்' என்றார். இவரும் 10,000 ரூபாய் செலுத்தியபோது, 15, 268 ரூபாய் கிடைத்தது. இதை நம்பிய அப்பெண், பல தவணைகளில் 10,98,113 ரூபாய் பல்வேறு வங்கிக்கணக்கிற்கு அனுப்பி உள்ளார். இப்பணத்துக்கு பதில் பணம் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண், கார்வார் சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தாார். போலீசார் விசாரிக்கின்றனர்.
2 minutes ago
3 minutes ago
4 minutes ago
5 minutes ago