மேலும் செய்திகள்
அமெரிக்கா பெடரல் வங்கி வட்டியை 0.25% குறைத்தது
12-Dec-2025
கடன் வட்டியை வங்கிகள் குறைக்க வேண்டும்
10-Dec-2025
நிதி திரட்ட வருகிறது ஐ.ஜி.எக்ஸ்.,
04-Dec-2025
புதுடில்லி:ஆக்ஸிஸ் வங்கி கிரெடிட் கார்டு வைத்திருக்கும் பல்வேறு வாடிக்கையாளர்கள், மோசடியான வெளிநாட்டு பரிவர்த்தனைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக, இவ்வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:சில 'இ--காமர்ஸ்' தளங்களில் மேற்கொள்ளப்பட்ட சில குறைந்த மதிப்புடைய கொள்முதல் குறித்த பரிவர்த்தனை எச்சரிக்கைகளை, வாடிக்கையாளர்கள் பெற்றனர்.அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக, மோசடியாளர்கள், சில கிரெடிட் கார்டுகளின் எண்களை அணுகி, அதை அதன் முடிவடையும் நாளுடன் பொருத்தி உள்ளனர். சர்வதேச பரிவர்த்தனைகளை பொறுத்தவரை, ஓ.டி.பி., சி.வி.வி., எண் போன்ற இரண்டு கட்ட அங்கீகரிப்பு தேவையில்லை. வங்கி சில பரிவர்த்தனைகளை தானாகவே தடுத்து இருந்தாலும், வாடிக்கையாளர்கள் பலர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளின் அளவு மிகவும் குறைவாக உள்ளது. கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய்க்கான கிரெடிட் பரிவர்த்தனைகளை, வங்கி தினசரி கண்டு வருகிறது. இத்துடன் ஒப்பிடுகையில், இந்த மோசடி பரிவர்த்தனைகள், ஆயிரங்கள் மற்றும் லட்சங்கள் என்ற அளவில் உள்ளன. மேலும், இவை ஒரு நாள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன, பின் இது முடிந்தது. வங்கி தரப்பில் இருந்து எந்த தரவும் கசியவில்லை. வாடிக்கையாளர்களின் தரவு, மிகவும் பாதுகாப்பாக உள்ளது.உணவகங்கள், பெட்ரோல் நிலையங்கள் போன்றவற்றில் கார்டு பயன்படுத்தப்பட்ட போது, கார்டு எண்களை அவர்கள் அணுகி இருக்கக்கூடும். பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களது கிரெடிட் கார்டுகள், மாற்றப்படுகின்றன. அவர்கள் கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட தொகையை மீண்டும் வங்கி செலுத்துகிறது.இச்சம்பவங்கள் குறித்து, ரிசர்வ் வங்கிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சம்பங்களை எதிர்காலத்தில் தவிர்ப்பதற்கான வழிமுறைகளை காண வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
12-Dec-2025
10-Dec-2025
04-Dec-2025