உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / மினிமம் பேலன்ஸ் இல்லையென கூறி வங்கிகள் ரூ.8,500 கோடி கட்டாய வசூல்

மினிமம் பேலன்ஸ் இல்லையென கூறி வங்கிகள் ரூ.8,500 கோடி கட்டாய வசூல்

புதுடில்லி:பொதுத்துறை வங்கிகள், குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்காத வாடிக்கையாளர்களிடமிருந்து, அபராதமாக கடந்த ஐந்து நிதியாண்டுகளில் மட்டும், கிட்டத்தட்ட 8,500 கோடி ரூபாய் வசூலித்துள்ளன. நேற்று பார்லியில் இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த, நிதித்துறைக்கான மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி இவ்வாறு தெரிவித்தார். வெவ்வேறு வங்கிகள் மற்றும் வெவ்வேறு விதமான கணக்குகளை பொறுத்து, இந்த அபராத தொகை மாறுபடுகின்றன.நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ., கடந்த 2020 - 21ம் நிதியாண்டு முதல், குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிப்பதை நிறுத்திய நிலையில், அதன் பிறகும் இந்த தொகை அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.பல வங்கிகள் காலாண்டு சராசரி இருப்பு வைத்திருக்காவிடில் அபராதம் வசூலிக்கின்றன. சில வங்கிகள் சராசரி மாதாந்திர இருப்பு வைத்திருக்காமல் இருந்தால், அபராதம் வசூலிக்கின்றன.

வங்கிகளின் வசூல்

வங்கிகள் அபராதம் (ரூ. கோடியில்) பேங்க் ஆப் பரோடா 1,251பேங்க் ஆப் இந்தியா 828பேங்க் ஆப் மகாராஷ்டிரா 471கனரா பேங்க் 1,158சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா 587இந்தியன் பேங்க் 1,466இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் 20பஞ்சாப் அண்டு சிந்து பேங்க் 55பஞ்சாப் நேஷனல் பேங்க் 1,538ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 640யூகோ பேங்க் 66யூனியன் பேங்க் ஆப் இந்தியா 415மொத்தம் 8,495காலகட்டம் (2019 -20 முதல் 2023 - 24 வரை)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Sathyanarayanan Sathyasekaren
ஆக 05, 2024 20:49

இங்கே பொங்கும் அறிவாளிகள் இப்படிப்பட்ட சேவை கட்டணத்தை அறிமுகப்படுத்திய பொருளாதார ஊழல் மன்னன், சிதம்பரத்தை பற்றி ஒரு வார்த்தை பேசுவதே இல்லை. எண்ணமோ பிஜேபி அரசுதான் சேவை கட்டணத்தை கொட்டுவந்தது போல பேசுவார்கள்.


venkates
ஆக 03, 2024 20:05

இதனை தடை செய்ய வேண்டும் , வங்கி கணக்கை முடித்த பிறகும் பணம் கட்ட மெசேஜ் வருகிறது ஏன்?


rama adhavan
ஜூலை 31, 2024 23:49

டாஸ்மாக் சாராயம் வாங்க ஆதார் எண் இணைக்கட்டும். சாராயத்துக்கு எவ்வளவு செலவு, மினிமம் பேலன்ஸ் க்கு எவ்வளவு செலவு செய்கிறார்கள் என தெரியும்.


Senthoora
ஆக 05, 2024 07:35

அதேபோல சம்பளம் எடுத்து வங்கியில், எடுக்காமலும், வங்கி பணத்ததை செலவு செய்யாதவங்களையும் பார்த்து ரைடு விடணும். ஏன்னா அவங்கதான் கிம்பளம் அதான் லஞ்சம் வாங்குறாங்க.


rama adhavan
ஜூலை 31, 2024 23:45

காங்கிரஸ் காலத்தில் கொடுத்த பூஜாரி லோன் திரும்பி வராது கொடுக்கவா வங்கி உள்ளன? வருமானம் இன்றி வங்கி எப்படி சம்பளம் கொடுக்கும்? இதர செலவு செய்யும்? நமது மக்களுக்கு பேராசை.


Senthoora
ஆக 05, 2024 07:11

கொடுத்தாங்க அவங்க, தப்பவிட்டாங்க இவங்க, வருமானம் இன்றி சம்பளம் கொடுக்க அநியாய மினிமம் இல்லையென்று கட்டாய வசூல் எதுக்கு. வங்கியில் உளப்பானதுக்கு தினம் எவ்வளவு வட்டி வருது தெரியுமா? கடன் திரும்ப வராவிட்டால் சொத்தை அபகரியுங்க, சும்மா கடன் கொடுக்கவில்லையே.


A P
ஜூலை 31, 2024 21:42

ரிசர்வ் வங்கி மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள்தான் உள்ளதா என்று சந்தேகம் வருகிறது. அரசியல் திருடர்களும் அவர்களின் வாரிசுகளும், அநியாய விலை விற்று கொள்ளை லாபம் பார்க்கும் பல வியாபாரிகளும் வேண்டுமானால், வங்கி சொல்கிற மினிமம் பாலன்ஸ் வைத்துக்கொள்ள முடியும். மத்திய அரசே, ஜீரோ பாலன்ஸ் கணக்கு திறக்க ஊக்குவிக்கும்போது , மினிமம் பாலன்ஸ் என்று அபராதம் விதிப்பதவும் pickpacket போன்ற ஒரு கொள்ளைதான். மத்திய அரசு எப்படி இதை வேடிக்கை பார்க்கிறது என்று தெரியவில்லை. மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் இதில் உடனடியாக தலையிட்டு, மினிமம் பாலன்ஸ் கடடாயத்தை உடனே ஒழிக்க வேண்டும்.


Sridhar
ஜூலை 31, 2024 14:55

இந்த நடைமுறை உலகெங்கிலும் வங்கிகளால் பின்பற்றப்படும் ஒன்றுதானே? இந்த விதிமுறைகள் தெரிந்ததுதானே வாடிக்கையாளர்களும் வங்கிகளில் கணக்கு ஆரம்பிக்கிறார்கள்? அது என்ன "கட்டாய" வசூல்??


Senthoora
ஆக 05, 2024 07:18

மன்னிக்கவும் உலகெங்கும் இல்லை. இந்த நடைமுறை, சிலநாடுகளில் உங்கள் சம்பளப்பணம் அந்தவங்கிக்கு வந்தால் மினிமம் பாலன்ஸ், பணம் எடுக்கவோ, போடவோ கட்டணம் அரவிடப்படாது. வங்கியில் மினிமம் பாலன்ஸ் வேண்டுமானால் 10 வைத்தால் போதும் என்று சட்டம் கொண்டுவந்தால் நல்லது. ஏழைகளிடம் எப்படி பெரிய தொகையை வைக்கமுடியும்.


Sathyanarayanan Sathyasekaren
ஆக 05, 2024 20:47

செந்தூரா உலகில் எல்லா நாடுகளிலும் மினிமம் பாலன்ஸ் உண்டு. நான் அமெரிக்கன் பாங்கில் கணக்கு வைத்துஇருந்தபோது, 1500 டாலர் மினிமம் பாலாலன்ஸ் இல்லையென்றால் 25 டாலர் பிடிப்பார்கள். தெரியாவிட்டால் தெரிந்துகொள்ளுங்கள்.


மேலும் செய்திகள்



புதிய வீடியோ