உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / பணக்காரர் வரிசையில் அம்பானியை பின்னுக்கு தள்ளிய கவுதம் அதானி

பணக்காரர் வரிசையில் அம்பானியை பின்னுக்கு தள்ளிய கவுதம் அதானி

புதுடில்லி:இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் வரிசையில், முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி, கவுதம் அதானி முதல் இடத்தை பிடித்துள்ளார்.உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் தரவரிசை குறித்த, 'புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ்' பட்டியலில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, 12வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். இதையடுத்து, இந்தியா மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக அதானி தற்போது உள்ளார்.முன்னதாக, கடந்த டிசம்பரில் இந்த தரவரிசையில், அதானி 15வது இடத்திலும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 14வது இடத்திலும் இருந்தனர். இதை தொடர்ந்த காலக்கட்டத்தில், கிட்டத்தட்ட 63,661 கோடி ரூபாய் லாபம் ஈட்டியதன் வாயிலாக, அதானியின் சொத்து மதிப்பு 8.10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்து. இதன் காரணமாக, தற்போது 12வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக முகேஷ் அம்பானி, 13வது இடத்தில் உள்ளார்.அதானி குழுமம் பங்குச்சந்தை முறைகேட்டில் ஈடுபட்டதாக, 'ஹிண்டன்பர்க்' நிறுவனம் கடந்த ஆண்டு ஜனவரியில் குற்றஞ்சாட்டியது. இதை தொடர்ந்து, அதானி குழும பங்கு விலை பெரும் சரிவை கண்டன. இதனால் அதானியின் சொத்து மதிப்பு, 60 சதவீதம் வரை சரிந்தது. இந்த நிலையில், தற்போது முதல் இடத்தை அவர் பிடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

g.s,rajan
ஜன 07, 2024 08:01

BJP is Totally behind Adanis Top most Wealth....


Jai
ஜன 06, 2024 23:14

சன் டிவிக்கு தமிழ்நாட்டில் எப்படி வருமானம்? அப்புறம் அவர்கள் திமுகவிற்கு செய்யும் கைமாறு தெரியாததா? அம்பானிகளுக்கும் பாஜாஜூக்கும் காங்கிரஸ் செய்யாததா? நாளைக்கு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அவர்களை எப்படி சமாளிப்பதுன்று அதானி குருப்புக்கு தெரியாததா? பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடறான், அது இன்னைக்கும்தான் நாளைக்கும்தான்


K.n. Dhasarathan
ஜன 06, 2024 22:36

இன்னும் உலகத்திற்கே முதல் பணக்காரர் ஆகலையா? மோடி ஐயா ஆதரவு இருந்தும் இப்படியா? விரைவில் ஆகி விடுவார். நல்லா வருவீங்க


Sathyasekaren Sathyanarayanana
ஜன 06, 2024 23:40

தசரதா தமிழகத்தில் ஊரை கொள்ளை அடித்து ஊழல் செய்து ஒரு குடும்பமும் அவர்களோட கொத்தடிமை குறுநில மன்னர்களும் கோடி கோடியாக பிண அறையில் வைத்து இருக்கும் [பணம், உண் கண்களுக்கு தெரியவில்லையா? கண்ணாடியை மாற்றி கொண்டு பாருங்கள்.


g.s,rajan
ஜன 06, 2024 17:44

Karuna and Co the World Wide Un bea Political Businessman .....


g.s,rajan
ஜன 06, 2024 14:16

Indians are Made Poor .....


Sampath Kumar
ஜன 06, 2024 12:01

ஆக மொத்தத்தில் இந்த இரண்டு பெயரு குடும்பம் தான் பன்னகரனுக இந்தியாவில் இந்த பிஜேபி வருவதற்கு முன்பு இவர்கள் பேறை யார்க்கும் தெரியாது


Senthoora
ஜன 06, 2024 06:10

நன்றி பிஜிபிக்கு


babu
ஜன 06, 2024 09:44

NAndu thanum mele yerathu adatha nandayaium yera vidathu.


Sathyasekaren Sathyanarayanana
ஜன 06, 2024 23:38

ஆஸ்திரேலியா போனாலும் கொத்தடிமை திருட்டு திராவிட புத்தி போகவில்லையா? லாரி டிரைவர், பஸ் கண்டக்டர், எப்படி கோடி கண்ணக்கில் சொத்து சேர்த்தார்கள்? திருட்டு குடும்ப தயவில்தானே? கேட்க வாய் இல்லையா?


sankaranarayanan
ஜன 06, 2024 01:30

விரைவிலேயே அதானி குழுமத்தையும் பின் தள்ளக்கூடிய குடும்பம் கோபாலபுரத்திலிருந்து உருவாகிக்கொண்டிருக்கிறது


NicoleThomson
ஜன 06, 2024 06:48

ஏற்கனவே அவங்க தான் இருக்காங்க.. வெளிநாட்டில் முதலீடு செய்தது அந்த நேரத்தில் ஜகத்து இலங்கையில் செய்த முதலீடு எங்கிருந்து வந்தது?


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ