மேலும் செய்திகள்
வர்த்தக துளிகள்
17-Dec-2025
அக்ரி டெக் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி
14-Dec-2025 | 1
அமெரிக்கா பெடரல் வங்கி வட்டியை 0.25% குறைத்தது
12-Dec-2025
கடன் வட்டியை வங்கிகள் குறைக்க வேண்டும்
10-Dec-2025
புதுடில்லி: இந்தியாவில் சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில், தனியார் வங்கிகள் தொடர்ந்து முன்னணியில் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில், பொதுத்துறை வங்கிகளின் பங்களிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என, 'சிட்பி' எனும் சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி, 'சி.ஆர்.ஐ.எப்., ஹைமார்க்' இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 2025 செப்டம்பர் நிலவரப்படி, நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் தனியார் வங்கிகள், தொடர்ந்து முன்னிலையில் உள்ளன. பொதுத்துறை வங்கிகளின் பங்கு, கடந்த 2023 செப்டம்பரில் 39.3 சதவீதத்தில் இருந்து, 37.80 சதவீதமாக குறைந்துள்ளது. பொதுத்துறை வங்கிகள் இழந்த சந்தையை, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் கைப்பற்றி உள்ளன. குறிப்பாக, தனிநபரை உரிமையாளராக கொண்ட நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் பங்கு, தற்போது 41 சதவீதமாக உள்ளன. செப்., நிலவரப்படி, சிறுதொழில்களுக்கான மொத்த கடன் வழங்கல், 46 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 16.20 சதவீத வளர்ச்சியாகும். முந்தைய காலாண்டோடு ஒப்பிடும்போது, கடன் வளர்ச்சி 1.50 சதவீதமாக உள்ளது. மேலும், தற்போது செயல்பாட்டில் உள்ள கடன் கணக்குகளின் எண்ணிக்கை, 7.30 கோடியாக உயர்ந்துள்ளது. இது ஆண்டுக்கு 11.80 சதவீதம் அதிகரிப்பாகும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.
17-Dec-2025
14-Dec-2025 | 1
12-Dec-2025
10-Dec-2025