உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி /  அமெரிக்கா பெடரல் வங்கி வட்டியை 0.25% குறைத்தது

 அமெரிக்கா பெடரல் வங்கி வட்டியை 0.25% குறைத்தது

வாஷிங்டன்: அமெரிக்காவில் பொருளாதார விரிவாக்கம் மந்தம், வேலையிழப்புக்கான அபாயம் நீடிப்பதற்கு மத்தியில், அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது. பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பாவெல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து, 3.50 சதவீதம் முதல் 3.75 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு செப்டம்பரில் இருந்து, தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக பெடரல் ரிசர்வ் வட்டியை குறைத்துள்ளது. இதனால், வாகன கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட குறுகிய கால கடன்களுக்கான வட்டி குறையும். இது குறித்து பெடரல் ரிசர்வ் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: இந்தாண்டு துவக்கம் முதல் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. அதேநேரம், பொருளாதார வளர்ச்சியில் நிலையற்றத்தன்மை நீடித்து வருகிறது. எனவே, 2 சதவீத பணவீக்க இலக்கு மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய இரண்டு பக்கமும் உள்ள அபாயங்களை உன்னிப்பாக கவனித்து வட்டி குறைக்கப்பட்டுள்ளது. சமீபத்திய மாதங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்த போதிலும், வேலை இழப்புக்கான அபாயங்கள் உள்ளன. மேலும், வரவிருக்கும் வேலைவாய்ப்பு சந்தை தரவுகள், பணவீக்கத்துக்கான காரணிகள் மற்றும் பணவீக்க எதிர்ப்பார்ப்புகள், நிதி, சர்வதேச முன்னேற்றங்கள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை