உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ரூ.25,000 கோடியில் டொயோட்டா ஆலை

ரூ.25,000 கோடியில் டொயோட்டா ஆலை

மும்பை:'டொயோட்டா கிர்லோஸ்கர்' நிறுவனம், மாநில அரசுடன் இணைந்து, மஹாராஷ்டிரா சத்ரபதி சம்பாஜி நகரில், 25,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், வாகன தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த புதிய ஆலையின் வாயிலாக 8,000 பேருக்கு நேரடியாகவும்; 16,000 பேருக்கு துணை பிரிவுகளிலும் என, மொத்தம் 24,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆலையில், ஆண்டுக்கு கிட்டத்தட்ட 4 லட்சம் மின்சார மற்றும் ஐ.சி.இ., வகை வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும் எனவும், மூன்று ஆண்டுகளில், இந்த புதிய ஆலையில் உற்பத்தி துவங்கும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை