உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இந்தியாவில் முதலீடு செய்வதில் 59% ஜெர்மன் நிறுவனங்கள் ஆர்வம்

இந்தியாவில் முதலீடு செய்வதில் 59% ஜெர்மன் நிறுவனங்கள் ஆர்வம்

புதுடில்லி:ஜெர்மனி நாட்டை சேர்ந்த நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்ய அதிகம் ஆர்வம் காட்டி வருவது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.ஜெர்மனியில் உள்ள கே.பி.எம்.ஜி., மற்றும் இண்டோ - ஜெர்மன் வர்த்தக சபை, 'ஜெர்மன் - இந்திய வணிக கண்ணோட்டம் 2024' என்ற கணக்கெடுப்பு ஒன்றை நடத்தின. இந்த கணக்கெடுப்பில் பங்கேற்ற ஜெர்மன் நிறுவனங்களில் 59 சதவீத நிறுவனங்கள், இந்தியாவில் நடப்பாண்டில் முதலீடுகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன.மேலும், 78 சதவீத நிறுவனங்கள் தங்கள் விற்பனை அதிகரிக்கும் என்றும், 55 சதவீத நிறுவனங்கள் லாபம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கின்றன. இந்தியாவை தங்கள் முதலீட்டு இடமாக தேர்வு செய்வதற்கு, குறைந்த தொழிலாளர் செலவு, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் உயர் தகுதி வாய்ந்த நிபுணர்கள் ஆகிய காரணங்களை இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான கண்ணோட்டத்திலும், இந்தியாவில் அதிக வளர்ச்சியை இந்நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. வரும் 2029க்குள், தங்களின் விற்பனை வளர்ச்சி விகிதம் 20 சதவீதத்துக்கு மேலாக இருக்கும் என, 37 சதவீத நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.தங்கள் லாபம் 20 சதவீதத்துக்கு மேல் இருக்கும் என, 25 சதவீத நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.தற்போது, 33 சதவீத ஜெர்மன் நிறுவனங்கள், இந்தியாவை தங்கள் உள்நாட்டு சந்தைக்கான தயாரிப்பு இடமாக கொண்டுள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இது, 45 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான கண்ணோட்டத்திலும், இந்தியாவில் அதிக வளர்ச்சியை, ஜெர்மன் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை