உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அதானி - ஐ.சி.ஐ.சி.ஐ., கூட்டு கிரெடிட் கார்டு அறிமுகம்

அதானி - ஐ.சி.ஐ.சி.ஐ., கூட்டு கிரெடிட் கார்டு அறிமுகம்

புதுடில்லி: அதானி குழுமம் நிதித் துறையில் கால்பதிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகிவந்த நிலையில், தற்போது ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியுடன் இணைந்து, நேற்று கிரெடிட் கார்டு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. விமான பயணியரை மையப்படுத்தி, இந்த 'கோ பிராண்டட்' கிரெடிட் கார்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.அதானி குழுமம், நிதித்துறையில் நுழைய ஏதுவாக, கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதமே, 'அதானி ஒன்' என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த செயலி வாயிலாக விமானம், ரயில் மற்றும் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்யவும், விமான நிலையங்களில் பல்வேறு சேவைகளை அணுகவும் முடியும். இந்நிலையில், தற்போது ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி மற்றும் 'விசா' கார்டு நிறுவனத்துடன் இணைந்து, கிரெடிட் கார்டு வசதியை அதானி ஒன் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்டுகளை பயன்படுத்துவோருக்கு, அதானி ஒன் செயலியிலும், மற்ற பிற அதானி குழும சேவைகளுக்கு கட்டணம் செலுத்துவதிலும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை