உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பண்டிகை காலத்தை முன்னிட்டு கடலை பருப்பு விலை உயர்வு

பண்டிகை காலத்தை முன்னிட்டு கடலை பருப்பு விலை உயர்வு

புதுடில்லி:பண்டிகை காலத்தை முன்னிட்டு, கடலை பருப்புக்கான தேவை அதிகரித்துள்ளதால், கடந்த மாதம் விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளதாக, தொழில்துறை நிர்வாகிகள் தெரிவித்தனர். பலவித இனிப்பு மற்றும் கார வகைகளில் கடலை பருப்பு பயன்படுத்தப்படுவதால், பொதுவாகவே பண்டிகை காலத்தை முன்னிட்டு, பருப்புக்கான தேவை அதிகரிக்கும். இதனால், கடந்த மாதம், கடலை பருப்பின் விலை 10 சதவீதம் உயர்ந்தது. அதேநேரம், துவரம் பருப்பின் விலை மட்டும் ஐந்து சதவீதம் குறைந்திருந்தது.இதுகுறித்து வர்த்தகர்கள் தெரிவித்திருப்பதாவது:அரசின் எதிர்பார்ப்பின்படி, மஞ்சள் பட்டாணி பெரிய அளவில் இறக்குமதி செய்யப்பட்டாலும், கடலை பருப்பின் தேவை அதிகரிப்பால் அதன் விலை அதிகரித்துள்ளது. இருப்பினும், செப்டம்பர் மாதத்திற்குள் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பருப்பு விலை உயர்வு தடுக்கப்படலாம்.ஏற்கனவே, மஞ்சள் பட்டாணியின் வரியற்ற இறக்குமதிக்கான அனுமதியை, வருகிற அக்டோபர் 31ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இந்த காலஅவகாசத்தை அரசு மேலும் நீட்டிக்கும் பட்சத்தில், மஞ்சள் பட்டாணியின் விலையில் சரிவு ஏற்படும். கடந்த மாதம் துவரம் பருப்பின் விலை ஐந்து சதவீதம் குறைந்திருந்தாலும், வானிலை மாற்றம், ஆப்பிரிக்க வினியோகத்தில் தாமதம், பண்டிகை தேவை மற்றும் தமிழ்நாடு, ஆந்திர அரசுகளின் கொள்முதலுக்கு எதிர்பார்க்கப்படும் அனுமதிகள் உள்ளிட்ட காரணங்களால், துவரம் பருப்பின் விலையும் வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ