உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஹோம் கிரெடிட் பைனான்ஸ் டி.வி.எஸ்., வாங்குகிறது

ஹோம் கிரெடிட் பைனான்ஸ் டி.வி.எஸ்., வாங்குகிறது

புதுடில்லி:'ஹோம் கிரெடிட் இந்தியா பைனான்ஸ்' நிறுவனத்தின் 80.74 சதவீத பங்குகளை வாங்க உள்ளதாக 'டி.வி.எஸ்., ஹோல்டிங்ஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான ஒப்புதலை நிறுவனத்தின் இயக்குனர் குழு வழங்கியுள்ளது. மீதமுள்ள 19.26 சதவீத பங்குகளை, 'பிரேம்ஜி இன்வெஸ்ட்' நிறுவனமும் மற்ற சில நிறுவனங்களும் வாங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோம் கிரெடிட் நிறுவனம், இந்தியாவில் வீட்டு உபயோகப் பொருட்கள், மொபைல் போன், லேப்டாப் மற்றும் இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு கடன் வழங்கி வருகிறது. கடந்த மார்ச் மாத நிலவரப்படி இந்நிறுவனத்தின் கட்டுபாட்டின் கீழ் உள்ள சொத்துக்களின் மதிப்பு 5,535 கோடி ரூபாயாக இருந்தது.இந்நிலையில், டி.வி.எஸ்., ஹோல்டிங்ஸ், பிரேம்ஜி இன்வெஸ்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து, 686 கோடி ரூபாய்க்கு ஹோம் கிரெடிட் இந்தியா நிறுவனத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை