உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அரசுக்கு ரூ.60,000 கோடி ஈட்டி தந்த கோல் இந்தியா

அரசுக்கு ரூ.60,000 கோடி ஈட்டி தந்த கோல் இந்தியா

புதுடில்லி : பொதுத்துறை நிறுவனமான 'கோல் இந்தியா', கடந்த நிதியாண்டில், அரசுக்கு 60,140 கோடி ரூபாய் வருவாய் ஈட்டித் தந்துள்ளது. இது கடந்த 2022-23ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 6.40 சதவீதம் அதிகமாகும். நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியில், 80 சதவீதத்துக்கும் அதிகமான நிலக்கரி உற்பத்தி செய்வது கோல் இந்தியா நிறுவனம். இந்நிறுவனம் கலால் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்தியதன் வாயிலாக, ஒட்டுமொத்தமாக, கடந்த நிதியாண்டில், அரசுக்கு 60,140 கோடி ரூபாய் வருவாய் ஈட்டித் தந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் அரசுக்கு 6,069 கோடி ரூபாய் வரி செலுத்தியுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 14.80 சதவீதம் அதிகமாகும்.மொத்தம் செலுத்தப்பட்ட 60,140 கோடி வரியில், அதிகபட்சமாக ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு 13,268 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஒடிசா மாநிலத்துக்கு 12,836 கோடி ரூபாயும்; சத்தீஸ்கருக்கு 11,891 கோடி ரூபாயும்; மத்திய பிரதேசத்துக்கு 10,866 கோடி ரூபாயும்; மஹாராஷ்டிராவுக்கு 6,189 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.எந்தெந்த மாநிலங்களில் நிலக்கரி உற்பத்தி செய்யப்படுகிறதோ அவற்றுக்கு நிலக்கரி விற்பனை விலையில் 14 சதவீத பங்கு வழங்கப்படுகிறது. அதுபோக, நிலக்கரி உற்பத்தியால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதற்காக துவங்கப்பட்டுள்ள, மாவட்ட கனிம அறக்கட்டளைகளுக்கு, விற்பனை விலையில் 30 சதவீதம் வழங்கப்படுகிறது. புதைபடிவ எரிபொருளை உற்பத்தி செய்யும் மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு, நிலக்கரி சுரங்கத் துறை பெரும் உதவி புரிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை