உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சோப்பு, ஷாம்பூ, எண்ணெய் விலையை உயர்த்தும் நிறுவனங்கள்

சோப்பு, ஷாம்பூ, எண்ணெய் விலையை உயர்த்தும் நிறுவனங்கள்

புதுடில்லி : எப்.எம்.சி.ஜி., நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளின் விலையை, அண்மையில் 2 முதல் 17 சதவீதம் வரை உயர்த்தி உள்ளன.நுகர் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், அதிகரித்த உள்ளீட்டு செலவுகள் காரணமாக, தங்கள் தயாரிப்புகளின் விலையை உயர்த்தி வருகின்றன. சோப், பாடி வாஷ் போன்றவற்றின் விலை 2 முதல் 9 சதவீதமும், ஹேர் ஆயில்களின் விலை 8 முதல் 11 சதவீதமும், குறிப்பிட்ட சில உணவு பொருட்களின் விலை 3 முதல் 17 சதவீதமும் உயர்த்தப்பட்டு உள்ளன.'ஹிந்துஸ்தான் யூனிலீவர்' நிறுவனம், அதன் ஷாம்பூ வகைகளின் விலையை, 4 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. இதேபோல், 'நெஸ்லே' அதன் காபி விலையை, 8 முதல் 13 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது.கடந்த 2022 மற்றும் 2023 துவக்கத்தில், பொருட்களின் விலையை உயர்த்தி வந்த எப்.எம்.சி.ஜி., நிறுவனங்கள், கடந்த நிதியாண்டில் பெரும்பாலும் விலையை உயர்த்தாமலே இருந்து வந்தன. ஆனால் தற்போது, மீண்டும் விலையை உயர்த்த துவங்கி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை