உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஜூன் காலாண்டில் விலை உயர்வால் தங்கத்தின் தேவை சரிவு கண்டது

ஜூன் காலாண்டில் விலை உயர்வால் தங்கத்தின் தேவை சரிவு கண்டது

மும்பை: கடந்த ஜூன் காலாண்டில் தங்கத்தின் விலை அதிகரித்து இருந்ததால் அதன் தேவை 5 சதவீதம் சரிவடைந்து, 149.70 டன்னாக குறைந்திருந்ததாக, உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில், தேவை 158.10 டன்னாக இருந்தது. கடந்த ஜூன் காலாண்டில், 24 காரட் தங்கத்தின் விலை 74,000 ரூபாயை எட்டியதால், தேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேவை குறைந்த போதிலும், மதிப்பின் அடிப்படையில், 17 சதவீதம் அதிகரித்து, 93,850 கோடி ரூபாயாக இருந்தது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் இது, 82,530 கோடி ரூபாயாக இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிவு 2023 (ஏப்ரல் - ஜூன்) 2024 (ஏப்ரல் - ஜூன்) சதவீதம்

மொத்த தங்கம் தேவை 158.10 டன் 149.70 டன் 5 (குறைவு)நகைக்கான தேவை 128.60 டன் 106.50 17 (குறைவு)முதலீட்டுக்கான தேவை 29.50 டன் 43.10 டன் 46 (அதிகரிப்பு)மறுசுழற்சி செய்யப்பட்ட தங்கம் 37.60 டன் 23.00 டன் 39 (குறைவு)இறக்குமதி செய்யப்பட்ட மொத்த தங்கம் 182.30 டன் 196.90 டன் 8 (அதிகம்)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ