உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தங்க சேமிப்பு பத்திரங்கள் லாபம் 122 சதவீதம்

தங்க சேமிப்பு பத்திரங்கள் லாபம் 122 சதவீதம்

புதுடில்லி:ரிசர்வ் வங்கி கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட தங்கப் பத்திரங்களுக்கான இறுதி விலையாக, யூனிட் ஒன்றுக்கு 6,938 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்து உள்ளது. இது வெளியிடப்பட்ட அன்று இருந்த விலையை விட, கிட்டத்தட்ட 122 சதவீதம் அதிகமாகும்.மத்திய அரசு, தங்கம் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றாக, 2015 நவம்பரில், தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை அறிவித்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக தங்கப் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி இந்த பத்திரங்கள் வெளியிடப்பட்டபோது, 1 கிராம் தங்கம் 3,119 ரூபாயாக இருந்தது.தற்போது 1 கிராம் தங்கத்துக்கு 6,938 ரூபாய் வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதால், கிராம் ஒன்றுக்கு 3,819 ரூபாய் லாபம் கிடைக்கிறது. இது கிட்டத்தட்ட 122 சதவீதம் அதிகமாகும்.கடந்த ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரையிலான காலகட்டத்தில், 24 காரட் தங்கத்தின் சராசரி விலையை கொண்டு இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. முதலீட்டை திரும்பப் பெற நாளையே கடைசி நாள் என்றும் தெரிவித்து உள்ளது. கிராம் ஒன்றுக்கு 3,819 ரூபாய் லாபம் கிடைக்கும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ