உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அன்னிய முதலீடு அதிகரிப்பு

அன்னிய முதலீடு அதிகரிப்பு

மும்பை:கடந்த ஜூன் காலாண்டில், நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீட்டின் நிகர மதிப்பு 57,270 கோடி ரூபாயாக இருந்தது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்தாண்டில் 39,000 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஜூன் காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய முதலீடுகளின் மொத்த மதிப்பு கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 26.40 சதவீதம் அதிகரித்து 1.87 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதில், தயாரிப்பு, நிதிசேவைகள், தொலைத்தொடர்பு, கணினி சேவை, மின்சாரம் மற்றும் எரிசக்தித் துறைகள் மட்டும் 80 சதவீதத்துக்கும் அதிகமான முதலீட்டை ஈர்த்திருக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை