| ADDED : மே 06, 2024 12:36 AM
வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான முதல் மாதத்தில் ஆறு லட்சத்திற்கு மேல் கணக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இவற்றில் பெரும்பகுதி கணக்கு ஏற்கனவே செயலாக்கம் பெற்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.2024 --- 25 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 ம் தேதி வரை அவகாசம் இருக்கிறது. எனினும், முதல் மாத காலத்தில் 5.92 லட்சம் கணக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.வருமான வரி தாக்கல் செய்யப்பட்டு, சரி பார்க்கப்பட்ட கணக்குகளில் பெரும்பகுதி கணக்குகள் செயலாக்கம் பெற்றுள்ளன. வருமான வரி கணக்கை துவக்கத்திலேயே தாக்கல் செய்வதன் மூலம், பிடித்தம் செய்யப்பட்ட தொகை திரும்ப வர வேண்டியிருந்தால் அது சீக்கிரம் கிடைக்க சாத்தியம் உள்ளதாக வல்லுனர்கள் கருதுகின்றனர்.மேலும், துவக்கத்திலேயே கணக்கு தாக்கல் செய்தால், ஏதேனும் தவறுகள் இருந்தால் அதை திருத்தி மறு தாக்கல் செய்யவும் போதுமான அவகாசம் இருக்கும் என்றும் கருதப்படுகிறது.கடைசி நேர அவசரத்தில் தாக்கல் செய்யும் போது தவறுகள் ஏற்படுவதை தவிர்க்கவும் இது உதவும் என்று கருதப்படுகிறது.